கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த படம் 'ஜிகர்தண்டா'. இந்த படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படம் 'வால்மீகி' என்ற பெயரில் ரீமேக்காகிறது. இந்த படத்தில் வருண் தேஜ், பாபி சிம்ஹா வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை ஹரீஷ் ஷங்கர் இயக்குகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் டீஸர் யூடியூபில் வெளியாகியுள்ளது.
அதர்வா நடிக்கும் ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கின் டீஸர் இதோ வீடியோ