www.garudabazaar.com
iTechUS

"தனா Genuine ஆன பொண்ணு, யாரையும் கீழ இறக்கி பேசமாட்டா".. மகேஸ்வரிகிட்ட சொன்ன விக்ரமன்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், 100 நாட்களை கடந்து விட்டது.

Vikraman and maheshwari discussion about dhanalakshmi character

Also Read | "உண்மைய பேசி இவ்ளோ தூரம் வந்துருக்காரு".. விக்ரமன் டைட்டில் வின்னர் ஆகணும்.. ADK Exclusive!!

ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் பிக் பாஸ் போட்டியில் களமிறங்கி இருந்த நிலையில், 6 போட்டியாளர்கள் Finale வாரத்திற்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். அதில், 3 லட்சம் பணத்தை எடுத்து விட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார் கதிரவன். இதனைத் தொடர்ந்து, அடுத்து பண பெட்டி ஒன்றும் பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம், அசிம், ஷிவின், விக்ரமன், அமுதவாணன் மற்றும் மைனா நந்தினி ஆகியோரும் Finaleவில் உள்ளனர். இதில், யாராவது பணப் பெட்டியை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்கள் மத்தியில் உருவாகி உள்ளது.

Vikraman and maheshwari discussion about dhanalakshmi character

இதற்கு மத்தியில், இந்த சீசனில் ஏற்கனவே வீட்டில் இருந்து வெளியேறி இருந்த போட்டியாளர்களும் கடந்த வாரம் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை புரிந்திருந்தனர். அவர்கள் மீண்டும் உற்சாகமாக வீட்டில் வலம் வந்திருந்தாலும் ஒரு சில சண்டை, சச்சரவுகள் கூட அதிகம் அரங்கேறி இருந்தது. முட்டை பெயரில் அசிம், விக்ரமன், மணி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் மோதி கொண்டது, மேக்கப் போட்டதாக அசிம் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இடையே சண்டை வெடித்தது என அடுக்கிக் கொண்டே போகலாம். இருந்தாலும் ஜாலியாகவும் நிறைய தருணங்களும் அமைந்திருந்தது.

Vikraman and maheshwari discussion about dhanalakshmi character

அதே போல பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபல தொகுப்பாளினி டிடி விருந்தினராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்தார். மேலும், பிரியங்கா, மாகாபா ஆனந்த் ஆகிய தொகுப்பாளர்களும் உள்ளே வருகை புரிந்திருந்தனர். இது தவிர, சீரியல் பிரபலங்கள் மற்றும் சூப்பர் சிங்கர் பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டில் நுழைந்திருந்தனர்.

இந்த நிலையில், தனலட்சுமி குறித்து மகேஸ்வரி மற்றும் விக்ரமன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Vikraman and maheshwari discussion about dhanalakshmi character

அப்போது தனா குறித்து பேசும் மகேஸ்வரி, "எனக்கு தெரிஞ்சு அவங்களுக்காக கத்தி பேசுனது எல்லாம் பண்ணி இருக்காங்களே தவிர, இன்னொருத்தவங்கள கீழ தள்ளி பண்ணாங்களா அப்படின்னு யோசிச்சா கண்டிப்பா இல்ல. அப்படி எல்லாம் தனா பண்ணாதே கிடையாது" என கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசும் விக்ரமன், "அவங்க (தனா) அப்படி பண்ணதே கிடையாது. அந்த பொண்ணு ரொம்ப Genuine. ஸ்ட்ரைட் ஃபார்வேர்ட். எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா பேசிடுவாங்க. பிறரை கீழே போட்டு பேசி பார்த்ததே கிடையாது. கோபப்படுவாங்க, ஆரம்பத்துல நானே Arrogance-ன்னு அவங்கள சொல்லி இருக்கேன். ஆனா அந்த Arrogance வெச்சு கூட அடுத்தவங்களை கீழ இறக்கணும்ன்னு நெனைச்சதே இல்ல" என தனலட்சுமி குறித்து விக்ரமன் பேசி இருந்தார்.

Also Read | "விஜய் சேதுபதிய Meet பண்ணனும்".. "சும்மா ஜோக் காட்டாதீங்க ADK".. ரசிகர் கமெண்ட்டிற்கு சூப்பர் பதிலடி!!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman and maheshwari discussion about dhanalakshmi character

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Dhanalakshmi, Maheswari, Vikraman will find this news story useful.