www.garudabazaar.com
iTechUS

"பிக்பாஸ்-க்கு முன்னாடியே மைனா போன்ல சொன்ன விஷயம்".. போட்டு உடைத்த மகேஷ்வரி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Mageshwari Talks to Vikraman about myna and Manikanta

Also Read | "Beef பிரியாணி வேணும்".. பிக்பாஸ் கேட்ட மெனு.. விக்ரமன் கொடுத்த தரமான லிஸ்ட்..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

Mageshwari Talks to Vikraman about myna and Manikanta

இந்நிலையில், வீட்டுக்குள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் வீட்டுக்குள் புதிய சிக்கல் ஒன்று வந்திருக்கிறது. விக்ரமன் தான் மணிகண்டாவிடம் முட்டை கேட்டதாகவும் அவர் இல்லை என்று சொல்லிவிட்டதாகவும் கூறுகிறார். அப்போது, "நான் இல்லைன்னு சொன்னேனா?" என கேட்கும் மணி, விக்ரமன் அருகே அமர்ந்திருந்த மகேஷ்வரியிடம்," நீங்க ஏன் தலையை ஆட்டுறீங்க. எனக்கு கோபம் வந்துடும். விக்ரமன் கிட்ட பேசும்போது நீங்க ஏன் குறுக்க வரீங்க" என்றார்.

இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது, மகேஷ்வரியின் எலிமினேஷன் பற்றி மணி பேசியிருக்கிறார். இதனிடையே மெண்டல் மாதிரி பேசாதீங்க என மகேஷ்வரி சொல்ல, "அதை வாபஸ் வாங்குங்க" என்கிறார் விக்ரமன். இந்த சூழ்நிலையில் அங்கிருந்த அசீம் மகேஷ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது அவரை சமாதானப்படுத்த விக்ரமன் முயற்சிக்க அசீம் - விக்ரமன் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

Mageshwari Talks to Vikraman about myna and Manikanta

இந்த சூழ்நிலையில் விக்ரமன் மற்றும் மகேஷ்வரி இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் மகேஷ்வரி,"பிக்பாஸ்க்கு முன்னாடியே மணிக்கு மைனா போன் செஞ்சு 'மஹி பிக்பாஸ்க்கு வராங்க. அவ நிச்சயம் டஃப் கொடுப்பா. அவளை கார்னர் பண்ணி தூக்கிடணும்னு சொல்லிருக்காங்க. இந்த விஷயத்தை பத்தி ஒருவார்த்தை கேட்கவில்லை. இந்த ஷோ-க்கு ரச்சிதா வராங்கன்னு தெரிஞ்சு எனக்கு போன் பண்ணி பேசுனா. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி அவங்க என்னை பத்தி பேசுன விஷயத்தை இந்த ஷோ-க்கு நானும் அவங்களும் வரோம்ன்னு தெரிஞ்ச அப்புறம் ஏன் எனக்கு போன் பண்ணி சொல்லணும்? நான் இதை எதுவுமே எபிசோட்-க்கு உள்ள கொண்டுவரல. ஆனா, ஒவ்வொருத்தரும் இப்படி நடந்துக்கும்போது நம்ம பேசாம இருக்கதுதான் தப்புன்னு தோணுது" என்கிறார். அப்போது விக்ரமன்,"இப்போ இதை பத்தி எந்த பிரயோஜனமும் இல்ல" எனக் கூறி சமாதானப்படுத்துகிறார்.

Also Read | இந்தா வந்துடுச்சுல்ல பணமூட்டை.. எடுத்துக்கிட்டு வெளியே போகலாம்-னு அறிவித்த பிக்பாஸ்..

தொடர்புடைய இணைப்புகள்

Mageshwari Talks to Vikraman about myna and Manikanta

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Mageshwari, Manikanta, Myna Nandhini, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.