www.garudabazaar.com
iTechUS

நடிகர் தனுஷ் இயக்கத்தில் S.J. சூர்யா? புதிய படத்தின் ஷூட்டிங் எப்போ? வேறலெவல் தகவல்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் தமிழில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.

Dhanush SJ Surya movie shooting will commence from April 2023 Deets

Also Read | 10 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் நடிக்கும் பிரபல நடிகர்?.. #AK62 படத்தின் சூப்பர் அப்டேட்!

காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை தொடங்கி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வரை பல படங்களில் நடித்துள்ள தனுஷ், தேசிய விருது பெற்ற நடிகர்.

வெற்றிமாறனின் இயக்கத்திலான பொல்லாதவன், ஆடுகள, வடசென்னை, அசுரன் ஆகிய படங்களும், செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களும் தனுஷின் திரைவாழ்வில் முக்கிய படங்களாக அமைந்தன. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கேட்பன் மில்லர், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

வாத்தி

தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் தான் 'வாத்தி'. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளது.

கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,  எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள். 

இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார்.

Dhanush SJ Surya movie shooting will commence from April 2023 Deets

'கேப்டன் மில்லர்'

நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம்  ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது. ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்க உள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும்  பீரியட் படமாக உருவாகவுள்ளது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

கேப்டன் மில்லர்  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜான் கொக்கன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டர் நாகூரன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, த.ராமலிங்கம் கலை இயக்குனராக பணிபுரிய உள்ளார். பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் ஆகியோர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றனர். மாஸ்டர் திலீப் சுப்பராயன், சண்டை காட்சி இயக்கத்தை கவனிக்க உள்ளார், இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.

Dhanush SJ Surya movie shooting will commence from April 2023 Deets

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் தனுஷ், ஜான் கொக்கன் கலந்து கொண்டனர்.

தனுஷ் - எஸ் ஜே சூர்யா

இந்நிலையில் தனுஷ் தனது அடுத்த படத்தை தானே இயக்கி கதாநாயகனாக நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் பூஜை சன் டிவி அலுவலகத்தில் நடைபெற்றது என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் துவங்க உள்ளது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | பிரபல OTT-யில் ஹன்சிகாவின் திருமண நிகழ்வு.. ! கலர்ஃபுல் போஸ்டருடன் வெளியான அப்டேட்..

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush SJ Surya movie shooting will commence from April 2023 Deets

People looking for online information on Dhanush, SJ Surya movie, Sj suryah will find this news story useful.