777 Charlie Trailer

”நம்ப முடியாத வசூல்.. இந்த weekend பல Records…” உதயநிதி பகிர்ந்த செம்ம மாஸ் Tweet

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின் வசூல் பற்றி பகிர்ந்துள்ள டிவீட் வைரலாகியுள்ளது.

Udhayanidhi viral Tweet about Vikram movie collection

Also Read | பிரபல திரையரங்கில் ‘பாகுபலி 2’ படைத்த சாதனை… முறியடித்து மாஸ் காட்டிய ‘விக்ரம்’

விக்ரம் வெற்றி…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளிலும் விக்ரம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

Udhayanidhi viral Tweet about Vikram movie collection

கமல் கொடுத்த அன்புப் பரிசுகள்…

விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார். இந்த கார் ஜப்பான் நாட்டின் பிரபல டுயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் ஆகும்.  இந்த லெகஸஸ் செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் இயக்குனர் லோகேஷின் உதவியாளர்கள் 13 பேருக்கு மோட்டார் பைக்குகளையும் பரிசாக வழங்கியுள்ளார். மற்றும் நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றையும் பரிசாக வழங்கினார். இதையடுத்து படத்தின் வெற்றியை அடுத்து பத்திரிக்கையாளர்களையும் இயக்குனர் லோகேஷுடன் சந்தித்து பேசினார்.

Udhayanidhi viral Tweet about Vikram movie collection

இரண்டாவது வாரம்…

வெற்றிகரமான முதல்வாரத்தைக் கடந்து தற்போது இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது விக்ரம் திரைப்படம். இந்நிலையில் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் தற்போது பகிர்ந்துள்ள டிவீட் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் “விக்ரம் திரைப்படம் பல சாதனைகளை இந்த வார இறுதியில் முறியடிக்க உள்ளது. நம்ப முடியாத வசூல்…” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த டிவீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read | BREAKING: சிவகார்த்திகேயன் & மடோன் அஸ்வின் படத்தின் ஷூட்டிங் எப்போ? வெளியானExclusive தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi viral Tweet about Vikram movie collection

People looking for online information on Kamal Haasan, Udhayanidhi, Udhayanidhi Tweet about Vikram movie collection, Vikram will find this news story useful.