Oh My Dog
Anantham
www.garudabazaar.com

லோகேஷ் கனகராஜ் & ராஜ்கமல் பிலிம்ஸ்.. கமலின் "விக்ரம்" படம் தொடர்பாக வெளியான செம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, கார்த்தியை வைத்து 'கைதி' படத்தினை இயக்கி இருந்த லோகேஷ், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தையும் கடைசியாக இயக்கி இருந்தார்.

vikram lokesh kanagaraj registered for copy rights

அனைத்து படங்களும் மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் இருந்ததால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, நடிகர் கமல்ஹாசனை வைத்து, 'விக்ரம்' என்னும் திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில், கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளதால், இந்த காம்போவை திரையில் காண வேண்டியே ரசிகர்கள் அனைவரும் உச்சகட்ட ஆவலில் உள்ளனர்.

கமல் - விஜய் சேதுபதி - பஹத்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், எடிட்டிங் பணிகளை பிலோபமின் ராஜ் மேற்கொண்டுள்ளார். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் மற்றும் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு பிசியாக செயல்பட்டு வருகிறது.

விக்ரம் படக்குழு வெளியிட்ட அப்டேட்

விக்ரம் திரைப்படம், ஜூன் 3 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால், விரைவில் திரைப்படத்தின் பாடல் மற்றும் டீசர் அல்லது டிரைலர் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில், விக்ரம் படத்தின் காபி ரைட்ஸ் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

கதைக்கு காபி ரைட் வாங்கிய லோகேஷ்

இந்நிலையில், விக்ரம் படத்துக்கான லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுக்கான காப்புரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு….

https://www.behindwoods.com/bgm8/

லோகேஷ் கனகராஜ் & ராஜ்கமல் பிலிம்ஸ்.. கமலின் "விக்ரம்" படம் தொடர்பாக வெளியான செம தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

vikram lokesh kanagaraj registered for copy rights

People looking for online information on Anirudh Ravichander, CopyRights, Fahadh Faasil, Kamal Haasan, Lokesh Kanagaraj, RajKamal International, Vijay Sethupathi, Vikram Movie will find this news story useful.