www.garudabazaar.com

துல்கர் படத்தின் இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி?.. இதுவும் ஃபுல் Romantic'அ இருக்கும் போலயே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

vijay sethupathi next direct by dance master brindha reports

மணிகண்டன் இயக்கத்தில் உருவான கடைசி விவசாயி படத்தில், கடைசியாக நடித்திருந்த விஜய் சேதுபதியின் நடிப்பில், அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம், ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாமனிதன், விக்ரம் ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகவுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, Merry Christmas, மும்பைக்கார் (ஹிந்தி திரைப்படங்கள்), விடுதலை, யாதும் ஊரே யாவரும் கேளிர், பொன்ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என தொடர்ந்து பல படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

துல்கர் படத்தின் இயக்குனர்

அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தை யார் இயக்கவுள்ளார் என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி ஆகியோரின் நடிப்பில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி வெளியாகி இருந்த திரைப்படம், 'ஹே சினாமிகா'. இந்த படத்தினை பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கி இருந்தார்.

ஷூட்டிங் எப்போ?

இவரது இயக்கத்தில் முதல் படமாக ஹே சினாமிகா வெளியாகி இருந்தது. இதற்கு அடுத்தபடியாக பிருந்தா மாஸ்டர் இயக்கவிருக்கும் திரைப்படத்தில் தான் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல, இந்த படத்தின் படப்பிடிப்பும் மே மாதத்தில் ஆரம்பமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. பிருந்தா - விஜய் சேதுபதி திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

vijay sethupathi next direct by dance master brindha reports

People looking for online information on Aditi Rao Hydari, பிருந்தா, விஜய் சேதுபதி, Brindha, Dulquer salmaan, Hey Sinamika, Kadaisi Vivasayi, Kajal Agarwal, Vijay Sethupathi will find this news story useful.