www.garudabazaar.com

"உன்ன கல்யாணம் பண்ணிட்டான்… என்ன பண்ணிட்டான்!”- VJS, நயன்தாரா, சமந்தாவின் KRK டிரைலர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரும் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Vijay sethupathi nayanthara Samantha KRK trailer released

Also Read | ரொம்ப நாள் கழிச்சு இந்தி படத்துல…. ’ராக்ஸ்டார்’ அனிருத் பகிர்ந்த வைரல் story !

காத்து வாக்குல ரெண்டு காதல்…

நானும் ரௌடிதான் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மூவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இவர்களோடு சேர்ந்து சமந்தாவும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் வழங்க விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.  ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீஸாகிறது. ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது.

Vijay sethupathi nayanthara Samantha KRK trailer released

காதிஜா- ராம்போ – கண்மணி…

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது விஜய் சேதுபதி இருவரையும் காதலிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது சமீபத்தில் வெளியான டீசரில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரிடமும் விஜய் சேதுபதி தனது காதலை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் காட்சி ரசிகர்களைக் கவர்ந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் அறிவித்தனர்.

Vijay sethupathi nayanthara Samantha KRK trailer released

டிரைலர்…

இந்நிலையில் பட ரிலீஸூக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான ப்ரமோஷன்களில் கணித்தது போலவே விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரையும் காதலிக்க, இருவரும் அவரைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி இருவரையும் காதலிப்பதாகவும், இருவரையும் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் கூறுகிறார்கள். இதனால் கோபமாகும் இருவரும் விஜய் சேதுபதியை அறைகிறார்கள். இறுதியில் விஜய் சேதுபதி யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது டிரைலர். கலகலப்பான இந்த டிரைலர் இப்போது இணையத்தில் கவனத்தைக் குவித்து வருகிறது.

Vijay sethupathi nayanthara Samantha KRK trailer released

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

"உன்ன கல்யாணம் பண்ணிட்டான்… என்ன பண்ணிட்டான்!”- VJS, நயன்தாரா, சமந்தாவின் KRK டிரைலர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi nayanthara Samantha KRK trailer released

People looking for online information on KRK movie, KRK movie Updates, KRK trailer release, Nayanthara, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.