Oh My Dog
Anantham
www.garudabazaar.com

அதிர்ச்சி! பிரபல மூத்த தமிழ் நடிகர் திடீர் மரணம்!.. திரைத்துறையினர் அஞ்சலி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

70-கள் மற்றும் 80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிய பிரபல நடிகர் சக்கரவர்த்தி இன்று  காலமானார்.

Veteran Tamil Actor Chakkaravarthy passed away

Also Read | “Bachelor படம் மாதிரி Pregnant ஆக்கி விட்ருணும்…” ஆபாசமாக வந்த comments… அதிரவைத்த ஸ்ரீநிதி Exclusive!

தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று இன்றைய இளைய இயக்குனர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு காலமாக 70-கள் மற்றும் 80-கள் காலமும், அந்த  காலகட்டங்களில் வந்த திரைப்படங்களும் உள்ளன.

Veteran Tamil Actor Chakkaravarthy passed away

அந்த கால கட்டங்களில் நடித்த பல முக்கிய நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் சக்கரவர்த்தி. ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் அவர்களது திரைப்படங்களில் நடித்த நடிகர் சக்கரவர்த்தி ரிஷிமூலம், ஆறிலிருந்து அறுபதுவரை, முள் இல்லாத ரோஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

இவற்றில் ரிஷிமூலம் திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசனுடனும், சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் வடிவுக்கரசி அண்ணனாகவும், ஆறிலிருந்து அறுபது திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு தம்பியாகவும் நடிகர் சக்கரவர்த்தி தோன்றியிருப்பார்.

Veteran Tamil Actor Chakkaravarthy passed away

தொடர்ந்து தர்ம யுத்தம், தூக்குமேடை, கொட்டுமுரசே, உதயகீதம், புதிய பயணம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் சக்கரவர்த்தி, பின்னாட்களில் பிரபல புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் சேனலான சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் பின்னணி வாய்ஸ் ஓவரும் கொடுத்துக்கொண்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகர் சக்கரவர்த்தி, மும்பையில் உள்ள தமது இல்லத்தில் அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார். அவரை எழுப்பச் செல்லும்பொழுது அவர் இயற்கை அடைந்து இருந்தார் என்பதை அவருடைய மனைவியே முதலில் அறிந்துள்ளார்.

Veteran Tamil Actor Chakkaravarthy passed away

நடிகர் சக்ரவர்த்தியின் மறைவுக்கு தமிழ் திரை உலகை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் ‌.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

அதிர்ச்சி! பிரபல மூத்த தமிழ் நடிகர் திடீர் மரணம்!.. திரைத்துறையினர் அஞ்சலி.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Veteran Tamil Actor Chakkaravarthy passed away

People looking for online information on Aarilirindhu Aruvathu Varai, சக்கரவர்த்தி, சிகப்பு ரோஜாக்கள், முள் இல்லாத ரோஜா, Chakkaravarthy, Mul Illatha Roja, RIP, Sigappu rojakkal, Tamil Film Industry, Veteran Tamil Actor Chakkaravarthy will find this news story useful.