RRR Others USA
www.garudabazaar.com

சன்னி லியோன் பேயாக நடிக்கும் Oh My Ghost… விஜய் சேதுபதி & வெங்கட் பிரபு வெளியிடும் First look

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன்னி லியோன் நடிப்பில் உருவாகும்’ ஓ மை கோஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு பற்றிய  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Venkatprabhu vijay sethupathi Release sunny leone OMG first look

இந்திய சினிமாவில் சன்னி லியோன்…

போர்னோகிராபி நடிகையான சன்னி லியோன் அந்த துறையில் இருந்து விலகி தற்போது இந்திய படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாலிவுட்டில் பல படங்களில் தோன்றிய அவர் இப்போது தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறார். அப்படி தமிழில் அவர் நடிப்பில் oh my ghost என்ற படம் உருவாகி வருகிறது. VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS  சார்பில்  D.வீரா சக்தி & K.சசிகுமார் வழங்க, சன்னி லியோன், சதிஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா , மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது.

Venkatprabhu vijay sethupathi Release sunny leone OMG first look

ஹிஸ்டாரிக் காமெடி…

தமிழில் நடிகை சன்னி லியோன் நடிப்பில்,  வரலாற்று பின்னணியில் உருவாகும்  ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” (OMG). இப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படம் பற்றி பேசிய இயக்குநர் யுவன், “OMG என்பது ஓ மை கோஸ்ட் என்பதன் சுருக்கமே, இப்படம் முழுக்க, முழுக்க ஒரு கமர்ஷியல், பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும். இப்படம் வரலாற்று பின்னணி கதைகளத்தை கொண்டது. முதல் முறையாக வரலாற்று பின்னணியில் ஹாரர் காமெடியை செய்துள்ளோம். சன்னி லியோன் பாத்திரம்  படத்தின் மிக முக்கியமான முதன்மை பாத்திரமாக, ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.

Venkatprabhu vijay sethupathi Release sunny leone OMG first look

பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் பிரபலங்கள்…

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்களான இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் வெளியிட உள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி 06:04:22 மணிக்கு வெளியிட உள்ளனர். இது குறித்த அறிவிப்பு போஸ்டரில் ‘HOTTEST GHOST EVER” எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Venkatprabhu vijay sethupathi Release sunny leone OMG first look

தொடர்புடைய இணைப்புகள்

Venkatprabhu vijay sethupathi Release sunny leone OMG first look

People looking for online information on Sunny Leone, Venkat Prabhu, Vijay Sethupathi will find this news story useful.