Anantham
www.garudabazaar.com

என்னா மனுஷன்யா… KGF வந்தப்போ மனசாற வாழ்த்துன புனீத்… திடீர்னு வைரலாகும் throwback வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புனீத் கேஜிஎஃப் 1 பற்றி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

Actor puneeth wished KGF team release viral video

Also Read |  1988 முதல் 2022…. 32 ஆண்டுகளாக கலக்கும் CBI சேதுராமய்யர்… மம்மூட்டி பட டிரைலர் ரிலீஸ்!

பேன் இந்தியா HITS…

சமீபகாலமாக இந்தியாவில் பேன் இந்தியா என்று சொல்லும் இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதிலும் தென்னிந்திய படங்களே முன்னணியில் உள்ளன. அப்படி சமீபத்தில் பாகுபலி, புஷ்பா, RRR வரிசையில் இணைந்துள்ளன கேஜிஎப் 2 பாகங்களும்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'கே ஜி எஃப் சாப்டர் 2’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியானது. பேன் இந்தியா திரைப்படமாக வெளியான கேஜிஎஃப் 2, திரைப்படத்தை தமிழில் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக எஸ் ஆர் பிரபு வெளியிட்டுள்ளார். கேஜிஎஃப் 2 திரைப்படம் 10,000 திரையரங்குகளில் வெளியானது. இரண்டாவது வாரத்தை தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள கே ஜி எஃப் நான்கு நாட்களில் உலகளவில் 540 கோடி ரூபாயை இந்த படம் மொத்தமாக வசூல் செய்துள்ளது. அதனால் விரைவில் 1000 கோடி ரூபாய் வசூலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிரட்டும் KGF 2….

கேஜிஎஃப் 2 படத்தின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு அதன் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கமே முக்கியக் காரணமாக அமைந்தது. கன்னட சினிமாவை கேஜிஎஃப்-க்கு முன்பு மற்றும் பின்பு என இரண்டாக பிரிக்கும் அளவுக்கு மாற்றியுள்ளது கேஜிஎஃப். இதையடுத்து தற்போது கன்னட சினிமாவின் மீது உலக சினிமா ரசிகர்களின் பார்வை விழ ஆரம்பித்துள்ளது.

Actor puneeth wished KGF team release viral video

புனீத்தின் நெகிழ்ச்சி வீடியோ…

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான புனீத் ராஜ்குமார். இந்த படத்தின் முதல் பாகம் வெளியான போது படக்குழுவினர் அனைவரையும் பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால் தற்போது கேஜிஎஃப் 2 ரிலீஸாகும் போது அவர் உயிரோடு இல்லை. இந்நிலையில் முன்பு புனீத் வாழ்த்திப் பேசிய அந்த வீடியோ திடீரென வைரலாகி வருகிறது. கேஜிஎஃப் 2 படத்தின் இந்த வெற்றியைப் பார்க்க அவர் உயிரோடு இல்லையே என ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Actor puneeth wished KGF team release viral video

புனீத் மறைவு…

கன்னட திரைப்பட உலகின் முன்னணி நடிகராக விளங்கும் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புனீத்தின் இழப்பு கன்னட திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகம் மற்றும் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், சிவ ராஜ்குமாரின் தம்பியுமாவார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

என்னா மனுஷன்யா… KGF வந்தப்போ மனசாற வாழ்த்துன புனீத்… திடீர்னு வைரலாகும் THROWBACK வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor puneeth wished KGF team release viral video

People looking for online information on KGF2, Puneeth, Puneeth wished KGF team, Yash will find this news story useful.