சிவகார்த்திகேயனின் டாக்டர் - படக்குழுவின் கில்லி அப்டேட்.! செம பார்ட்டி இருக்கு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

sivakarthikeyan anirudh doctor movie shooting details

நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த படம் ஹீரோ. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இத்திரைப்படத்தில் அநியாயத்தை கண்டு பொங்கி எழும் ஹீரோ கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இதையடுத்து இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் திரைப்படம் டாக்டர். அனிருத் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் டாக்டர் படத்தை பற்றி புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாஸ்டர் படத்தில் நடிக்கும் நடிகர் கலையரசன் பகிர்ந்துள்ள பதிவில். டாக்டர் படத்தின் அடுத்த ஷெட்யூல் கோவாவில் நடப்பதாக தெரிவித்துள்ளார். டாக்டர் படத்தின் சாட்டிலைட் உரிமையை அண்மையில் சன் டிவி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor