மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் இருந்து கிளம்பி அதிரடியாக இந்த படத்தில் இணைந்த விக்ரம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 11, 2020 10:42 PM
'கடாரம் கொண்டான்' படத்துக்கு பிறகு விக்ரம், மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'இமைக்கா நொடிகள்' பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் 'கோப்ரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் கோப்ரா படத்தை 7 ஸ்கீரின் ஸ்டுடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக KGF பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். சிவகுமார் விஜயன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
கோப்ரா படத்தின் அடுத்த கட்டப்படப்பிடிப்பு கொல்கத்தாவில் இன்று (11.01.2020) முதல் தொடங்குகிறதாம். பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு சிறிய பகுதியை முடித்து விட்டு கோப்ரா படப்பிடிப்பில் விக்ரம் இணைந்துள்ளாராம்.