மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன்’ நடிகர் கொடுத்த சூப்பர் அப்டேட் - ’27 நாட்களில்…’
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 09, 2020 05:23 PM
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவைலை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்றை அதே பெயரில் இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், அஸ்வின், லால், ரியாஸ் கான், அர்ஜூன் சிதம்பரம், மோகன் ராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு மணிரத்னத்துடன் இணைந்து 'அபியும் நானும்' புகழ் குமாரவேல் திரைக்கதை அமைத்துள்ளார். ஜெயமோகன் இந்த படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
ரவி வர்மன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து ரசிகர்கள் அடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடித்துவந்த ரியாஸ் கான் தன் இன்ஸ்டா பக்கத்தில், தற்போது சென்னை திரும்பி உள்ளதாகவும். தாய்லாந்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் 27 நாட்கள் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.