விக்ரமின் 'கோப்ரா' பட டீமிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன கருத்து.. வைரலாகும் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 07, 2020 10:18 AM
நடிகர் விக்ரம் தற்போது 'இமைக்கா நொடிகள்' பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார். விக்ரமின் 58வது படமான இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
7 ஸ்கீரின் ஸ்டுடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக KGF பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். சிவகுமார் விஜயன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மிருனாளினி ரவி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் என்பதால், இயக்குநர் அஜய் ஞானமுத்து உள்ளிட்ட படக்குழுவினருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் ஒரு நல்ல ஹிட் படமா கொடுங்க என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாக பகிரப்பட்ட வீடியோவை இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார்.
❤️❤️❤️ https://t.co/0LjgILQJnn
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) January 6, 2020