அதித்ய வர்மாவுக்கு லெட்டர் போட்ட அர்ஜுன் ரெட்டி - விவரம் உள்ளே
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 06, 2020 11:04 AM
தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியான தமிழ் வெர்ஷனில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் அவர் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து துருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார். விஜய் தேவரகொண்டா துருவுக்கு அனுப்பியுள்ள அக்கடிதத்தில் அவர் நடிப்பை பாராட்டி எழுதியுள்ளார்.
அக்கடிதத்துக்கு இன்ஸ்டாவில் ரிப்ளை கொடுத்திருக்கும் துருவ், தங்கள் பெர்ஃபெக்டான அர்ஜுன் ரெட்டி நடிப்பு மீதுள்ள காதல் தான் என்னை இந்த அளவு ஆதித்ய வர்மாவை சித்தரிக்க தூண்டியது என்று தெரிவித்துள்ளார்.
Tags : Dhuruv, Vijay Devarakonda, Adithya Varma