#MatineeMemories - ''வீட்டுல விஜய் படம் பார்க்க என்ன பண்ணுவோம் தெரியுமா.?'' - மாஸ்டர் ரைட்டர் ரத்னகுமார்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பல திரைப்பட விமர்சகர்களை பார்க்க முடிகிறது. ஊரடங்கு நேரத்தில் வீட்டில் மட்டுமே இருப்பதால், பலரின் கவனமும் அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற OTT Platforms-களின் பக்கம் திரும்பி இருக்கிறது. பல மொழி படங்களையும் பார்க்க தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா ரசிகர் கூட்டம். என்னதான் இப்படி படம் பார்த்தாலும், தியேட்டருக்கு சென்று ஒரு படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே என நீங்கள் ஒருமுறையாவது ஃபீல் செய்திருந்தால், நமது Matinee Memories-ன் இந்த அத்தியாத்தை கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும்.

இயக்குநர் ரத்னகுமார் மேட்னீ மெமரீஸ் | vijay's master writer rathna kumar opens his matinee memories

மேயாத மான், ஆடை மூலம் தனக்கான அடையாளத்தை ஆழமாக பதிவு செய்து, விஜய்யின் மாஸ்டருக்கு பேனா பிடித்த இயக்குநர் ரத்னகுமாரிடம் அவரின் தியேட்டர் அனுபவங்கள் குறித்து பேச தொடங்கினோம். ரொம்ப ஜாலியாக ஆரம்பித்த அவர் கூறியதாவது, ''நான் சின்ன வயசுல வளர்ந்தது ரெட் ஹில்ஸ்ல. அப்பா ரிப்போர்டர்ன்றதுனால, தியேட்டருக்கு போனா டிக்கட் எல்லாம் கிடையாது. அப்படியே ஜாலியா போய், ஏதாவது ஒரு சீட்டுல உட்கார்ந்து படத்தை பார்த்துடுவோம். கிட்டத்தட்ட தியேட்டரை ஒரு டாரன்ட் மாதிரி பயன்படுத்திட்டு இருந்தேன். அப்போ தியேட்டர்ல நாங்க தான் சீட் புடிக்கனும். நானும் என் தம்பியும் ஒரு ஏழு பேருக்கு சீட் புடிச்சுட்டு உட்கார்ந்துடுவோம். ஆனா அதுக்கு அப்புறம்தான் மேட்டரே. வீட்டுல இருந்து அவங்க வர்றதுக்குள்ள, அந்த சீட்டை நாங்க பாதுகாக்க பட்டபாடு இருக்கே, அது பல த்ரில்லர் படங்களுக்கு சமம்'' என தன் சிறுவயதுக்கு டைம் ட்ராவல் அடித்தவர், அப்படியே தளபதி பக்கம் திரும்பினார்.

நினைத்தேன் வந்தாய், இதுதான் நான் தியேட்டர்ல பார்த்த முதல் தளபதி படம். அப்போ விஜய் சார்க்கு செம லேடிஸ் ஃபேன்ஸ் இருந்தாங்க. காதலுக்கு மரியாதை படம் எல்லாம் பார்த்துட்டு, பொண்ணுங்க மத்தியில அவருக்கு செம க்ரேஸ் இருந்துச்சு. எங்க அக்காங்க எல்லாம் அவருக்கு ரசிகைகள். அப்போ படத்துக்கு போகனும்னா தனியா வீட்டுல விட மாட்டாங்க. அதனால என்னை வைச்சு பர்மிஷன் வாங்கிட்டு, விஜய் சார் படத்துக்கு போவோம். அப்படி ஆரம்பிச்ச பயணம், இப்போ தளபதி படத்தை முதல்நாள் முதல் ஷோ விடாம பார்த்துட்டு வர  வரைக்கும் வளர்ந்துடுச்சு. ஒவ்வொரு விஜய் சார் படத்தையும் முதல் நாள் பார்க்குறதுன்றதே செம கூத்துதான். அப்படி ஒவ்வொரு அனுபவத்தையும் சேர்த்து ஒரு புத்தகமாவே எழுதலாம். அந்தளவுக்கு தளபதி படங்கள் எனக்கு மறக்க முடியாத மெமரீஸை கொடுத்திருக்கு'' என தளபதி டயரீஸை பகிர்ந்தவர், தியேட்டர்கள் குறித்து மிக ஆழமான தன் கருத்துக்களையும் பகிரவும் தவறவில்லை.

எப்பவுமே தியேட்டர்ல படம் பார்க்குறது தனி ஸ்பெஷல்தான். என்னதான் நம்ம வீட்டுல சாமி ரூம் இருந்தாலும் கோவிலுக்கு போயிட்டு தானே இருக்கோம். அப்படிதான் தியேட்டரும். செம ஹோம் தியேட்டர் செட் பண்ணி, படுத்துட்டு, சாப்பிட்டுகிட்டு நம்ம இஷ்டப்படி படம் பார்க்குறது வேற. ஆனா தியேட்டர்ல உட்கார்ந்து அந்த படத்தை பார்க்குறதுதான் அந்த கலைக்கு நாம தர சரியான மரியாதை. ஏன்னா, அப்போ நமக்கும் அந்த படத்துக்கும் மட்டும்தான் ஒரு தொடர்பு இருக்கும். இரண்டரை மணி நேரம் நாம அந்த அனுபவத்துக்குள்ளயே இருப்போம். அதனால இதுதான் என்னை பொறுத்த வரைக்கும் சிறப்பான தரமான எக்ஸ்பீரியன்ஸ'' என தன் மேட்னீ மெமரீஸ்களை உற்சாகமாக பகிர்ந்துகொண்டார்.

 

Entertainment sub editor