BREAKING : அடுத்தடுத்து 'அதிரடி'... 'மாஸ்டர்' படத்தின் 'டிரெய்லர்' தேதி அறிவிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தின் ஆடியோ லான்ச் முதல் முறையாக சற்று வித்தியாசமாக படக்குழு மற்றும் வெகு சில ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

படத்தின் சிங்கிள் பாடல்கள் வெளியான போது கூட ரசிகர்கள் அவற்றை கொண்டாடி தீர்த்தனர். இதனையடுத்து இன்று மாஸ்டர் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆம் மாஸ்டர் படத்தின் டிரைலர் மார்ச் மாதம் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற செய்தி வெளியாகி உள்ளது. தளபதி ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட் காத்திருக்கிறது எனபது மட்டும் உண்மை.