கவுதம் மேனன் ஸ்டைலில் மனைவியை படம் பிடித்த மாஸ்டர் நடிகர் ஷாந்தனு.! ஒரு செம லவ் பாட்டு ஃபீல்.!!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ஷாந்தனு தனது மனைவி கீர்த்தியை வைத்து எடுத்துள்ள புதிய வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மூத்த இயக்குநர் கே.பாக்யராஜின் மகன் ஷாந்தனு. தமிழ் சினிமாவில் இவர் இளம் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவர் தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்தி என்கிற கிக்கியை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகர் ஷாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது மனைவி கீர்த்தியை அழகான மாலை வெயிலில் படம் பிடித்துள்ள அவர், அதற்கு மின்னலே பாடலை சேர்த்து வெளியிட்டுள்ளார். ''லைட்டா ஃபீல் பண்ணி.. ஒரு மான்ட்டேஜ்'' என அவர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ஷாந்தனுவே எடுத்து, அவரே எடிட் செய்து பதிவிட்டுள்ளதாக அவரது மனைவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.