“எங்க தளபதி அண்ணன் கூட நடிக்கப்போறேன்...!” - கனவு நிஜமான குஷியில் சாந்தனு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 64 படத்தில் நடிகர் சாந்தனு இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Shanthanu Bhagyaraj Tweet About Vijay's Thalapathy64

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவிருக்கிறார். சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்  நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் 2020ம் ஆண்டின் கோடைவிடுமுறை தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகில் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அடுத்த படத்தின் அப்டேட் வந்ததால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். மேலும் அடிக்கடி இப்படத்திற்கான ஃபேன் மேட் போஸ்டர்களை தயாரித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகன் நடிக்கவுள்ளார் மேலும் .  விக்ரம் வேதா , பேட்ட போன்ற படங்களில் வில்லனாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் சேதுபதி தளபதி 64ல் வில்லனாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்  இப்படத்தில் நடிகரும் விஜய்யின்  ரசிகருமான சாந்தனு நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் "கனவுகள் நிஜமாகும். விஜய் அண்ணாவுடன் இணைந்து நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி, படத்தில் வாய்ப்பளித்ததற்காக நன்றி" என்றும் குறிப்பிட்டுள்ளார்.