தளபதி 64-ல் விஜய் சேதுபதி மட்டுமல்ல.. இந்த நடிகரும் நடிக்கிறார்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 02, 2019 03:11 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் வெறித்தனம் பாடலின் புரோமோ வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தீபாளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.
இதனையடுத்து மாநகரம், கைதி படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ஒரு படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் 64 வது படமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் சாந்தனு இணைந்துள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
The most energetic and charming @imKBRshanthnu gets on board for #Thalapathy64!😊#ShanthnuJoinsThalapathy64 #Summer2020@actorvijay @Dir_Lokesh @VijaySethuOffl @anirudhofficial @SonyMusicSouth pic.twitter.com/Rf1bLyNJHg
— XB Film Creators (@XBFilmCreators) October 2, 2019