''எவ்ளோ பெரிய ஸ்டாரா இருந்தாலும் முடியாது'' - விஜய்யின் அப்பா புகழாரம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 26, 2019 01:31 PM
பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் சார்பாக பார்த்திபன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் படம் 'ஒத்த செருப்பு'. கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு, சி.சத்யா இந்த படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டி இந்த படத்துக்கு ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். இந்த படத்துக்காக சந்தோஷ் நாராயணன் இசையமைத்து, சித் ஸ்ரீராம் பாடிய குளிருதா புள்ள ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பிரபல இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், பார்த்திபனை சந்தித்து ஒத்த செருப்பு படத்தை பாராட்டி பேசினார். அப்போது பேசிய அவர், நான் இன்னை்ககு படம் பார்த்தேன். நான் எங்க ரசித்தேனோ, அத்தன பேரும் அங்க ரசிச்சாங்க. நான் எந்திச்சு பாராட்டனும்னு நெனச்சா, 20, 30 பேர் எந்திருச்சு நின்னு பாராட்டுறாங்க.
இந்த படத்தை நீங்க செதுக்கியிருக்கிங்க. இல்லனா எவ்ளோ பெரிய ஸ்டாரா இருந்தாலும் முடியாது. ரொம்ப புத்திசாலித்தனமா பண்ணியிருக்கீங்க. நீங்க ஜீனியஸ் சார். புதுசா வர பசங்க என்னென்னமோ பன்றதா சொல்றாங்களே, நீங்க அதெல்லாம் தூக்கி சாப்டீங்க சார்'' என்றார்.