பிரபல ஹீரோயினுடன் மீண்டும் ஜோடி சேரும் ஜெய் - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 06, 2019 05:38 PM
ஜெய் நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'நீயா 2'. இந்த படத்தில் ஜெய்யுடன் கேத்ரின் தெரஸா, வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இதனையடுத்து அவர் மலையாளம் சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து 'மதுர ராஜா' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து 'பிரேக்கிங் நியூஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் புதுப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி அவர், வெற்றி என்ற புதுமுக இயக்குநர் படத்தில் நடிக்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காதல் கண் கட்டுதே, சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்ளிட்ட படங்களில் நடித்த அதுல்யா நடிக்கவிருக்கிறாராம். இந்த படத்தின் இயக்குநர் வெற்றி, இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளாராம்.