தமிழில் வெளியாகும் சமந்தாவின் சூப்பர் ஹிட் படம் ! விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 07, 2019 12:22 PM
மிஸ்.கிரானி என்ற தென் கொரிய படத்தின் உரிமையை வாங்கி தெலுங்கில் தயாரான படம் ஓ பேபி. ஒரு வயதான பாட்டி ஒரு சின்ன கெமிக்கல் ரீயாக்ஷன் மூலம் இளமையாக மாறினால், அதுவும் தன் பேத்தியின் உருவத்திற்கு மாறினால் என்ன நடக்கும் என்பதை காமெடியாக சொல்கிற படம். இதனை பி.வி.நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார்.

பாட்டியாக லட்சுமியும், பேத்தியாக சமந்தாவும் நடித்திருந்தார்கள். இவர்களுடன் நாகசவுர்யா, ராஜேந்திர பிரசாத், ஊர்வசி உள்பட பலர் நடித்திருந்தனர். மிக்கி ஜே.மேயர் இசை அமைத்திருந்தார், ரிச்சர்ட் பிரசாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 50 கோடிக்கும் கூடுதலாக வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தின்போதுதான் சமந்தாவுக்கு 60 அடி உயர கட்அவுட் வைத்து தெலுங்கு ரசிகர்கள் அசத்தினார்கள். சமந்தாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போது இந்தப் படம் அதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி வெளிவருகிறது.