Breaking: விஷால்-சுந்தர் சி Combo-வின் அடுத்த Plan என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 16, 2019 08:57 PM
‘அயோக்யா’ திரைப்படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ‘ஆம்பள’, ‘மதகஜ ராஜா’ திரைப்படங்களையடுத்து 3வது முறையாக சுந்தர்.சி-விஷால் கூட்டணி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் துருக்கி, அஸர்பைஜான் உள்ளிட்ட நாடுகளிலும், சென்னை பின்னி மில்லிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் பணிகள் நாளை (ஜூலை.17) முதல் ஆகஸ்ட்.8ம் தேதி வரை டேராடூன் மற்றும் ஜெய்ப்பூரில் நடைபெறும் நன் நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
Tags : Vishal, Sundar C, Tamannaah, Trident Arts