'இந்த பிக்பாஸ் பிரபலத்தின் வெற்றிப்பயணம் On the Way' - விஜய் டிவி சொன்ன தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 13, 2019 02:44 PM
கடந்த இரண்டு சீசன்களை விட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்பா - மகள் பாசம், நட்பு, சண்டை என சீசன் முழுவதும் பரபரப்பாகவே இருந்தது.

மேலும் இந்த சீசனில் டைட்டில் வின்னராக தர்ஷன் தான் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தர்ஷன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். முகேன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியில் முகேன் பாடிய நீதான் என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில் தற்போது பிக்பாஸ் பிரபலங்கள் தங்களது பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் முகன் குறித்து விஜய் டிவி, முகேனின் வெற்றிப் பயணம் On the way என்று குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவிற்கு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருன்றனர். மேலும் 'கவின் பற்றி அப்டேட் சொல்லுங்கள்' என ரசிகர்கள் விஜய் டிவியிடம் கோரிக்கை வைத்தனர்.
#MugenInVetriPayanam on the way! 😎😊
— Vijay Television (@vijaytelevision) November 13, 2019