'தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குநர் அட்லி - விஜய் இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'. இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கவிருப்பதாகவும், இதில் மகன் விஜய்யின் பெயர் பிகில் என்றும் எங்களுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்தது. மேலும், இந்த படத்தில் இரண்டு விஜய்யும் (அப்பா - மகன் ) ஒரே காட்சியில் இணைந்து தோன்றவிருக்கின்றனராம்.
இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா கதாப்பாத்திரத்தின் பெயர் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி இந்த படத்தில் நயன்தாராவின் பெயர் 'ஏஞ்சல்' என்று கூறப்படுகிறது.