Fakir Other Banner USA
www.garudabazaar.com

அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் மாஸ் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் சேரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரித்து வருகிறார்.

Chiranjeevi,Vijay Sethupathi, Nayanthara's Sye raa Film wrapped

சுதந்திர போராட்ட வீரர் உய்யலாவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். ரத்னவேலு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், சைரா படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது.  இந்த படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் கடினமாக உழைத்துள்ளார்கள். மேலும் சிறப்பாக ஒத்துழைத்தார்கள் அவர்களுக்கு என் நன்றி. இந்த படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்தின் டிஐ பணிகள் தொடங்கப்படவுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.