அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் 'பிகில்'. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால் ஏராளமான திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விஜய்க்கு வாழ்த்து சொல்லினர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யிடம் பவுண்சர்களாக பணிபுரியும் பிரபு, அன்பு, தாஸ் ஆகியோர் விஜய் குறித்து பிரத்யேகமாக Behindwoods Tvக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், இந்த படத்துல தளபதி ஃபுட்பால்ல தெறிக்க விட்ருக்காரு. ஒரு ஷாட் அடிச்சா பால் அப்படியே பறக்குது. எங்க கத்துகிட்டாருனு தெரியல. மதுரல சிலம்பம் தெரியும். கில்லி ல கபடி விளையாடுறாரு. பக்கா ஸ்போர்ட்ஸ் மேன் அவரு'' என்றனர்.
''கில்லி'ல கபடி விளையாடுறாரு, 'பிகில்'ல தளபதி ஃபுட் பால்ல தெறிக்க விட்ருக்காரு'' வீடியோ