www.garudabazaar.com

இந்தியன்-2 ஷூட்டிங்கில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. கமலுடன் இருக்கும் வைரல் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிரபல பாலிவுட் நடிகர் இணைந்துள்ளார்.

Kamal Haasan with Gulshan Grover in Indian 2 Shooting

Also Read | "நம்ம GAME ஆடப்போறோம்".. விஜய் சேதுபதியின் அனல் பறக்கும் DSP டிரெய்லர்!

கடந்த 1996-ஆம் ஆண்டு ஷங்கா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த   படம் இந்தியன். ஏ.‌எம். ரத்னம் தயாரிப்பில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இந்தியன்.

இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர்.

Kamal Haasan with Gulshan Grover in Indian 2 Shooting

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

Kamal Haasan with Gulshan Grover in Indian 2 Shooting

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளனர். இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்போது  நடந்து வருகிறது.

Kamal Haasan with Gulshan Grover in Indian 2 Shooting

சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் தனது ரசிகர்களை சந்தித்த வீடியோக்கள் வெளியாகி இருந்தன. மேலும் கமலின் புதிய தோற்றம் குறித்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

Kamal Haasan with Gulshan Grover in Indian 2 Shooting

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிரபல பாலிவுட் நடிகர் குல்சன் குரோவர் இணைந்துள்ளார். மேலும் கமலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிப்பது உற்சாகமாக இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

 

Also Read | துணிவு படத்தின் அமெரிக்க உரிமம்.. கைப்பற்றிய 'RRR, PS1, KGF-2' வினியோகஸ்தர்! சம்பவம் LOADING

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan with Gulshan Grover in Indian 2 Shooting

People looking for online information on Gulshan Grover, Indian 2, Indian 2 Shooting, Kamal Haasan will find this news story useful.