www.garudabazaar.com

பிரியங்கா மோகனுக்கு நடு ரோட்டில் ரோஜாப்பூ கொடுத்த ரசிகர் 😍.. அதுவும் லண்டன்ல! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை பிரியங்கா மோகன் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார்.

Fan Gave Rose flower to Priyanka Mohan Viral Video

Also Read | "வாரிசு ஆந்திராவில் 100 கோடி வசூலாகும்னு தில் ராஜூ நம்புறாரு".. - பிஸ்மி EXCLUSIVE!

‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் நானி நடித்து விக்ரம் குமார் இயக்கிய 'கேங் லீடர்' படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ’டான்’ஆகிய படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்து பிரபல முன்னணி தமிழ் ஹீரோக்களான ஜெயம் ரவியுடனும் நடிகர் தனுஷூடனும் ஜோடி சேர்ந்துள்ளார். தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் பிரியங்கா மோகன் தற்போது நடித்து வருகிறார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ் சினிமாவில் நடித்துள்ள பிரியங்கா மோகன், ஒந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படத்தில் தான் திரையுலகில் அறிமுகமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டவர்.

பிரியங்கா மோகன், தற்போது சுமார் 4 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ளார். நடிகர் விஜய்யின் மேனேஜரான ஜகதீஷ் பழனிச்சாமியின் தி ரூட் நிறுவனம் தான் பிரியங்காவின் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகளை கவனித்துக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில்  வீதிகளில் உலா வரும் போது   ஆண்டனி ஜோசப் என்ற ரசிகர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியங்கா மோகனுக்கு ரோஜாப்பூ கொடுத்து அவருடன் உரையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | "துணிவு ஜனவரி 11, வாரிசு ஜன. 12".. பொங்கல் ரிலீஸ் குறித்து பிஸ்மி EXCLUSIVE

பிரியங்கா மோகனுக்கு நடு ரோட்டில் ரோஜாப்பூ கொடுத்த ரசிகர் 😍.. அதுவும் லண்டன்ல! வைரல் வீடியோ வீடியோ

Fan Gave Rose flower to Priyanka Mohan Viral Video

People looking for online information on Priyanka Mohan, Priyanka Mohan Fan, Priyanka Mohan Fan gave rose flower will find this news story useful.