ஹீரோவும் நான் தான் வில்லனும் நான் தான் - Triple Action-ல் சந்தானம் - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானம் நடித்து கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளியான படம் ஏ1. சர்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தை ஜான்சன் இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

Santhanam Triple action in KJR studios Production No.9

இதனையடுத்து சந்தானம் நடிக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், 'ஒருத்தரா வந்தாலே காமெடி சரவெடி, இப்போ டிரிபிள் ஆக்சன் வேற! 9வது தயாரிப்பான இந்த படத்தில் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளோம். இந்த படத்தின் தலைப்பு வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும். படத்தின் தலைப்பு ஆச்சரியப்படுத்தும் வகையில் இறுக்கும் என்று கூறியுள்ளது.

இந்த படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் சந்தானம் நடிக்கவிருப்பதாகவும் ஹீரோவாக மட்டுமல்லாமல் அவர் தான் வில்லனும் அவர் தான் காமெடியனும் என்று எங்களுக்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.