விஷ்ணு விஷால் பதிவுசெய்த எப்.ஐ.ஆரின் இன்றைய நிலை - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 02, 2019 11:33 AM
விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கும் எப்.ஐ.ஆர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கும் எப்.ஐ.ஆர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.இப்படத்தின் டைட்டில் எப்.ஐ.ஆர். போலீஸ் துறையின் முதல் தகவல் அறிக்கை என்ற பொருளை இது குறிப்பிட்டாலும். டைட்டிலுக்கு கீழே பைசல், இப்ராஹிம், ரியாஸ் என மூன்று இஸ்லாமிய பெயர்களை குறிப்பிட்டு அதன் முதல் எழுத்து எப்.ஐ.சூர் என்று பொருள்படும்படி இருந்தது.
பின்னணியில் "ஐ.எஸ்.அமைப்பை சேர்ந்த சென்னை வாலிபர்கள் கைது" என்ற பத்திரிகை செய்தி இடம் பெற்றிருந்தன. இதில் விஷால் தீவிரவாதியாக நடிக்கிறாரா, அல்லது அவர்களை பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறாரா? என்று தெரியவில்லை. ஆனால் அவர் பர்ஸ்ட் லுக்கில் தீவிரவாதிகள் போன்று உடை அணிந்திருக்கிறார்.
இந்தப் படத்தை மனு ஆனந்த் என்பவர் இயக்குகிறார். சுஜாதா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிக்கிறார். மஞ்சிமா மோகன் ஹீரோயின். அஷ்வத் இசை அமைக்கிறார், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். இன்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.