சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பாரில் பணி செய்யும் பிரபல ஹீரோவின் சகோதரர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 30, 2019 09:15 PM
'பேட்ட' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'தர்பார்'. லைக்கா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், ஸ்ரீமன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல ஹீரோ விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா உதவி இயக்குநராக பணிபுரிகிறாராம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
Tags : Rajinikanth, Rudra, Anirudh Ravichander, Darbar