Buffoon D logo top
Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

புது லுக்கில் நடிகர் விஜய் சேதுபதி.. பிரபல நடிகர் இயக்குனருடன் சந்திப்பு.. வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi with director actor Parthiban Viral Photo

Also Read | "விக்ரம் & ஜெயம் ரவிக்கு ஜோடியா நடிச்சுட்டு.. இப்போ அக்கா தங்கையா".. மனம் திறந்த த்ரிஷா!

1996ஆம் ஆண்டு முதல் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்தவர் விஜய் சேதுபதி, லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, எம். குமரன் S/o மகாலெட்சுமி, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக கவனிக்க தக்க வகையில் நடித்திருப்பார்.

Vijay Sethupathi with director actor Parthiban Viral Photo

பின் தென்மேற்கு பருவக்காற்று, பீட்ஸா, சூது கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அவ்வப்போது கேமியோ, வில்லன் ரோல்களிலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi with director actor Parthiban Viral Photo

கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் படம் வெளியானது. இந்த படத்தில் சந்தானம் எனும் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து இருந்தார். காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன் படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார், விஜய் சேதுபதி.

Vijay Sethupathi with director actor Parthiban Viral Photo

விஜய் சேதுபதி நடித்து இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர்,  விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இந்நிலையில் விஜய் சேதுபதியை, இயக்குனர் நடிகர் பார்த்திபன் சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த புகைப்படத்தில் மெர்ரி கிறிஸ்துமஸ் பட லுக்கில் விஜய் சேதுபதி காட்சியளிக்கிறார்.

Vijay Sethupathi with director actor Parthiban Viral Photo

இந்த சந்திப்பு குறித்து, தனது முகநூல் பக்கத்தில், "இன்று மாலை …

ஆண்களில் ஷாரூக்கான் பெண்களில் Katrina Kaif இருவரையும் பிரமிக்க செய்து கொண்டிருப்power-ஐ சந்தித்தேன்.நேசிக்கும் கிளியும்,வாசிக்கும் பியானாவும்,யோசிக்கும் புதிய மார்க்கமாய் கண்டு ரசித்தேன் ரம்யமாய்!

கமல் சார் செங்கடல் என்றால் இவர் கருங்கடல்.

கடலாய் இருவருக்குமே அறிவின் அலை கரை நீள்கிறது.பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். நேசிக்கக் விரும்புகவர்களை நெருங்கக் கூடாதென்பார்கள்.நெருங்கியப் பின்னும்

அதிநேசம் கொள்பவராய் இருந்தார்.தித்திப்பின் சுவை நாவினில்.சந்திப்பின் தித்திப்பு அதை அசை போடுகையில்…" என பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

Also Read | சமந்தா நடிக்கும் PAN INDIA புராணத் திரைப்படம்.. ரிலீஸ் எப்போ? சூப்பர் போஸ்டருடன் வெளியான அப்டேட்!

Vijay Sethupathi with director actor Parthiban Viral Photo

People looking for online information on R parthiban, Vijay Sethupathi will find this news story useful.