www.garudabazaar.com

Viduthalai : சம்பவம் Loadingப்பா.. விடுதலை படத்தின் விறுவிறு ஷூட்டிங்.. வெளியான BTS படங்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தேசிய விருதுபெற்ற திரைப்படங்களை இயக்கியவர் முன்னணி வெற்றிமாறன். ஆடுகளம், அசுரன், விசாரணை என அதிரவைக்கும் திரைப்படங்களால கவனம் ஈர்த்த இயக்குநர் வெற்றிமாறன், இப்படத்தைத் தொடர்ந்து, ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்கும் புதிய திரைப்படம் விடுதலை.

vetrimaaran Viduthalai Vijay Sethupathi Soori Stunt BTS

நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தில் கதை நாயகனாக சூரியும், கதாநாயகனாக  விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் முதல்முறை வெற்றிமாறனுடன் கைகோர்க்கிறார் இசைஞானி இளையராஜா. மேலும் இந்த திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக வெளியாக உள்ளதாக அண்மையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இவர் ஏற்கனவே கோ, கவண் போன்ற படங்களை தயாரித்தவர். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். முன்னதாக விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை, பண்ருட்டி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் கொடைக்கானல் பகுதிகளில் நடந்த இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய சிறப்பு ஷூட்டிங் ஸ்பாட் BTS புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர். இந்த புகைப்படங்களில், இயக்குநர் வெற்றிமாறன், இப்படத்தின் சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் மற்றும் நடிகர் சூரி ஆகியோருடன் தொழில்நுட்பக் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. இதேபோல் இப்படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் டிவி கைப்பற்றி உள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

vetrimaaran Viduthalai Vijay Sethupathi Soori Stunt BTS

People looking for online information on Pa Ranjith, Vetrimaaran, Viduthalai, Viduthalai BTS will find this news story useful.