தளபதி கூட நடிக்கிறதுல.... தளபதி 64 குறித்து மக்கள் செல்வன் கருத்து!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 01, 2019 11:03 AM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் வெறித்தனம் பாடலின் புரோமோ வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தீபாளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.
இதனையடுத்து மாநகரம், கைதி படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ஒரு படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் 64 வது படமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்
இப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்றுதான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தளபதி விஜய் உடன் இணைவது பெரிய சந்தோசம் அளிக்கிறது. படக்குழுவிற்கும் இணை தயாரிப்பாளர் லலித் குமாருக்கும், லோகேஷ் கனகராஜுக்கும் நன்றி என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்
Happy to associated with #ThalapathyVijay sir & special thanks to #Lalithkumar & @Dir_Lokesh ☺️#Thalapathy64 https://t.co/n3YdBEydvR
— VijaySethupathi (@VijaySethuOffl) September 30, 2019