''வணக்கம் மாப்ள 'தளபதி 64'ல இருந்து...'' - பிரபல நடிகர் ட்விட்டர் மூலம் தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 20, 2019 06:16 PM
நடிகர் விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலம் ஷிவமோகாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மாநகரம், கைதி படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் பிரபல நடிகர் ரமேஷ் திலக், அர்ஜூன் தாஸ், மகாநதி சங்கர் உள்ளிட்டோரை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதற்கு தனது ட்விட்டர் பக்கம் மூலம் பதிலளித்த ரமேஷ் திலக், வணக்கம் மக்களே தளபதி 64 ல இருந்து என்று குறிப்பிட்டுள்ளார்.
Vanakkam makkale from #Thalapathy64 la irundhu😊😊 https://t.co/Esg3qqgOyH
— Ramesh Thilak (@thilak_ramesh) December 20, 2019