விஜய் சேதுபதி – திரிஷா நடித்த '96 படத்தின் தெலுங்கு ரீமேக் டீசர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 09, 2020 06:38 PM
விஜய் சேதுபதி - த்ரிஷா இணைந்து நடித்து கடந்த 2018 ஆம் வருடம் வெளியான '96' படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியிருந்தார்.

மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் பெரும் பலமாக அமைந்திருந்தது. மகேந்திரன் ஜெயாஜூ மற்றும் சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். பள்ளிப் பருவ காதலை பேசிய இந்த படம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் 'ஜானு' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் குட்டி ஜானுவாக தமிழில் நடித்த கௌரி கிஷன் தெலுங்கிலும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி – திரிஷா நடித்த '96 படத்தின் தெலுங்கு ரீமேக் டீசர் இதோ வீடியோ