விஜய் சேதுபதியின் பிறந்த நாள் பரிசாக ரசிகர்கள் செய்த வியக்கத்தக்க காரியம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 07, 2020 09:48 PM
'சங்கத் தமிழன்' படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர், தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்க, அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், விஜய் டிவி புகழ் தீனா, விஜே ரம்யா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 202 பேர் திருச்சியில் உடல் உறுப்பு தானம் செய்தனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த வருடாந்திர உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கான தமிழ்நாடு கணக்கெடுப்பில் அதிகபட்சம் 185 பெயரே இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது . மேலும் இதுநாள் வரையில் தமிழ்நாட்டில் உடலுறுப்பு செய்தவர்கள் எண்ணிக்கை 1338 என்றும் கூறப்படுகிறது.