தளபதி விஜய் - விஜய் சேதுபதியின் 'மாஸ்டர்' - Collections சும்மா தெறிக்க போது, All Area-லயும் 'ஹெட்'மாஸ்டர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 08, 2020 11:24 AM
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் படம் 'மாஸ்டர்'. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், கௌரி கிஷன், விஜே ரம்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் சென்னை மற்றும் செங்கல்பட்டு தவிர மற்ற ஏரியாக்களில் விநியோக உரிமை விற்பனையாகிவிட்டதாம். அதன்படி கோயம்புத்தூர், நார்த் மற்றும் சவுத் ஆற்காடு மற்றும் மதுரை ஆகிய 5 ஏரியாக்களிலும் ஃபைவ் ஸ்டார் செந்தில் உரிமையை பெற்றுள்ளாராம். மேலும் திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாக்களில் கார்த்திக் என்பவரும், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாக்களில் முத்துகனி என்பவரும் பெற்றுள்ளனராம்.