தளபதியின் 'மாஸ்டர்' படத்தின் முக்கிய Announcement - 'வேர்ல்டு மொத்தமும் அரள விடணும்...'
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 08, 2020 03:52 PM
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து 'மாஸ்டர்' படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தில் சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன்,விஜே ரம்யா, பிரேம் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.
இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், வெளிநாடுகளில் இந்த படத்தின் திரையரங்க மற்றும் டிஜிட்டல் உரிமையை யுனைட்டட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது.
We are thrilled to announce @uie_offl & @malikstreams have acquired #Master theatrical & digital rights for entire overseas. #MasterWithUIE
For Theatrical Enquires: suaib@uiemovies.com,
riyaz@uiemovies.com@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial pic.twitter.com/mqIzTGFSP4
— United India Exporters (@uie_offl) January 8, 2020