மாஸ்டரில் நடிக்கும் 96 பிரபலம் பெருமிதம் ‘...இந்த ரோல் கெடைக்க குடுத்து வெச்சுருக்கணும்’
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 07, 2020 11:38 AM
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த ‘96’ திரைப்படம் பள்ளிப்பருவ காதல், நட்பை நினைவுப்படுத்தும் விதமாக உருவாகியிருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த ராமசந்திரன்(ராம்), த்ரிஷா நடித்திருந்த ஜானகி தேவி(ஜானு) என்ற கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், இப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. அதில், கோல்டன் ஸ்டார் கணேஷ் மற்றும் பாவனா நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக்காகி உள்ளது.
ஜானு கதாபாத்திரத்தில் சமந்தாவும், ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் ஷர்வானந்தும் இணைந்து நடித்துள்ளனர். ‘ஜானு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தையும் தமிழில் இப்படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கியுள்ளார். தற்போது ஜானு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் அதைப் பகிர்ந்த நடிகை கவுரி கிஷன், மீண்டும் இளம் ஜானு கதாப்பாத்திரத்தில் நடிப்பது அதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.
The first look poster of the Telugu Remake of ‘96 is out and it’s titled - Jaanu.
— Gouri G Kishan (@Gourayy) January 7, 2020
Lucky enough to play young Jaanu another time.
I thank you God.@Premkumar1710 #JMahendran @Samanthaprabhu2 @ActorSharwanand @SVC_official #Jaanu pic.twitter.com/BtjxdOEbp9