“ரொம்ப தூரம் போய்ட்டியா ராம்..!” - மனதை கவர்ந்த Evergreen Love Story வந்து ஒரு வருஷமாச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள்செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘96’ திரைப்படம் ரிலீசாகி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளதை படக்குழுவினர் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Vijay Sethupathi and Trisha's One Year of 96 movie celebration

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்.4ம் தேதி வெளியான ‘96’ திரைப்படம் பள்ளிப்பருவ காதல், நட்பை நினைவுப்படுத்தும் விதமாக உருவாகியிருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த ராமசந்திரன்(ராம்), த்ரிஷா நடித்திருந்த ஜானகி தேவி(ஜானு) என்ற கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த படத்தில் இறுதி வரை ராம் ஜானு ஒன்று சேராதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், அது படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. தமிழில் வெற்றியடைந்த இப்படம் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதைத் தொடர்ந்து தெலுங்கிலும் இப்படம் உருவாகி வருகிறது. அதில், நடிகை சமந்தா மற்றும் சர்வானந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தையும் பிரேம்குமாரே இயக்கி வருகிறார்.

இந்நிலையில், பள்ளிக்கால காதல் காவியமான ‘96’ திரைப்படம் வெளியாகி ஓர் ஆண்டை கடந்துள்ள நிலையில், படக்குழுவினர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் ‘96’ படத்தின் நினைவுகளையும், அதற்கு மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

“ரொம்ப தூரம் போய்ட்டியா ராம்..!” - மனதை கவர்ந்த EVERGREEN LOVE STORY வந்து ஒரு வருஷமாச்சு! வீடியோ