அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படம் 'மெர்சல்' ரீமேக்கா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. பிறகு தளபதி விஜய்யுடன் இணைந்து அவர் இயக்கிய 'தெறி', 'மெர்சல்' என இரண்டும்  வெற்றிப் படங்களாக அமைந்தது.

Bigil Director Atlee to direct Shah Rukh Khan for his Next

இதனையடுத்து தளபதி விஜய்யுடன் மூன்றாவது முறையாக அட்லி இணைந்துள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து தீபாவளிக்கு வெளியாகவிருக்கிற இந்த படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்துக்கு சென்சாரில் U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அட்லி பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. அந்த படம் 'மெர்சல்' ரீமேக் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான்  ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும், ஆனால் அந்த படம் 'மெர்சல்' ரீமேக் இல்லை என்றும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.