‘Oh My கடவுளே’! சினிமாவில் அறிமுகமாகும் பிரபல டிவி சீரியல் நாயகி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் ‘Oh My கடவுளே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல சின்னத்திரை நடிகை அறிமுகமாகிறார்.

TV serial Actress Vaani Bhojan to debut in Oh My Kadavule

அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி வரும் ‘Oh My கடவுளே’ திரைப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலில் கலெக்டர் கதாபாத்திரத்தில் ‘சத்யா’-வாக நடித்து மூலம் பிரபலமானவர் வாணி போஜன். டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் வாணி போஜன் தற்போது வெள்ளித்திரையில் அறிமுகமாகவுள்ளார்.

‘Oh My கடவுளே’ திரைப்படத்தில் மற்றொரு நாயகியாக நடிக்க நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.