தமிழகத்தில் தேர்தலையொட்டி திரையரங்க காட்சிகள் ரத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளதையொட்டி திரையரங்க காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

All movie theatres to remain closed tomorrow April 18 – Election Day

நாடாளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதற்கட்டமாக நடைபெற்றதைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக நாளை ஏப்.18ம் தேதி காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நாளை (ஏப்.18) பகல் நேர காட்சிகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இரவு நேர காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.