'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களுக்கு பிறகு இயக்குநர் அருண்குமார் - விஜய் சேதுபதி இணையும் படம் 'சிந்துபாத்' . இந்த படத்தில் அஞ்சலி, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த படத்தை வாசன் மூவிஸ் மற்றும் கே புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாித்துள்ளன. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று(11.06.2019) நடைபெற்றது. இதில் பேசிய விஜய் சேதுபதி, ''பண்ணையாரும் பத்மினியும் படம் முடிஞ்ச பிறகு அருண் என் கூட கம்ஃபர்டபுள் ஆகிட்டான். அதனால என்கிட்ட இருந்து வெளியே போய்டுனு சொன்னேன். அப்புறம் சேதுபதியும் வெளியே போனாரு. ஆனா அவர யாரும் நம்பல. அப்புறம் சேதுபதி நானே பண்ணேன்.
அப்புறம் நானே ரெண்டு மூனு ஹீரோக்களுக்கு ஃபோன் பண்ணி சொன்னேன். நிஜமா நம்புங்க. நல்ல படம் எடுப்பாரு. ஆனா யாரும் நம்பல. சரிவா இந்த படம் நான் பண்றேன். இந்த படம் வெற்றியடஞ்சுச்சுனா வெளியே போய் படம் பண்ணனும்னு சொன்னேன்.
அருண்கிட்ட இருக்க பிளஸ் முன்னணி கதாப்பாத்திரங்களை நல்லவிதமாக காட்டுவார். பெண்களை நல்ல விதமாக காட்டுவார். படம் என்பதையும் காட்டி என் குடும்ப நண்பனாகவும் ஆகிட்டான். அதனால் தான் என் பையன இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.
சிந்துபாத் படம் நமக்கு முன்னாடியே தெரிஞ்ச கத தான். அத சொன்னா நியூஸ் ஆக்கி பிரச்சன பண்ணுவாங்க. பெயர் சொல்லல. கடந்து தன் மனைவிய ஒருத்தன் தூக்கிட்டு போய்டுவான். இவன் போய் மனைவிய எப்படி கஷ்படப்பட்டு போராடி காப்பாத்துவான்கிறது தான் கதை''என்றார்.
''அத சொன்னா நியூஸ் ஆக்கி பிரச்சன பண்ணிடுவாங்க'' - விஜய் சேதுபதி ஓபன் டாக் வீடியோ