பல நாடுகளில் நடக்கும் சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் கலந்து கொண்டு சிறப்பித்தவர் நரேன் கார்த்திகேயன். மேலும் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இவர் Behindwoods Airக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அஜித் உடனான தனது நட்பு குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், அஜித்தை ஒரு நடிகராக மட்டுமே அனைவருக்கும் தெரியும் . அவர் பல்வேறு திறமைகளை பெற்றவர். அவர் ரேடியோ கன்ட்ரோல் கார்ஸ் மற்றும் பிளேன்ஸ் ஆகியவற்றில் அவருக்கு மிக விருப்பம். நாங்கள் அது பற்றி இருவரும் பரிமாறிக்கொள்வோம்,
அவர் ரேஸிங் பண்ணிட்டு இருந்தாரு ஃபார்முலா 2 மட்டும் ஓட்டுநாரு. அந்த நேரத்துல டிரைவிங் பற்றி பேசிக்கொள்வோம். அவருக்கு அனுபவம் இல்லாததுனால நான் அவருக்கு உதவுவேன்.
அவரு 10 வருஷத்துக்கு முன்னாடி ஸ்டார்ட் பண்ணிருந்தாருனா ஆக்டிங் விட்டுட்டு இத கேரியரா எடுத்துருக்கலாம். அவருக்கு ரேஸிங் என்றால் பேஸன் . யுகேல போய் அனுபவம் குறைவாக இருந்தாலும் நல்ல ரேஸ்களில் கலந்துகொண்டிருக்கிறார். ஒரு ரேஷர் அது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தெரியும். அவர் தனியா போய் அவரே பழகி கலந்துகிட்டாரு என்று தெரிவித்தார்.
''அஜித் மட்டும் 10 வருஷத்துக்கு முன்னாடி ஸ்டார்ட் பண்ணிருந்தாருனா...'' வீடியோ