விஜய்சேதுபதி வைரல் டயலாக்- தனுஷ் பட தயாரிப்பாளருக்கு செம ஐடியா கொடுக்கும் அந்த இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் சஷிகாந்துக்கு இயக்குநர் சி.எஸ்.அமுதன் ஒரு யோசனை சொல்லியுள்ளார்.

cs amudhan posts a reply for vijay sethupathi's tweet over vijay

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. தனது வித்தியாசமான நடிப்பாலும் தேர்ந்தெடுக்கும் கதைகளாலும் தனக்கென தனி முத்திரையை இவர் பதித்துள்ளார். விஜய் சேதுபதி தற்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, நடிகர் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் சேதுபதி தனது ட்விட்டரில், 'போய் வேற வேலை இருந்தா பாருங்கடா' என பதிவிட்டிருந்தார். விஜய் சேதுபதியின் இந்த பதிவு வைரலானது.

இந்நிலையில் தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன் தயாரிப்பாளர் சஷிகாந்தை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்த தனது பதிவில், ' போய் வேற வேல இருந்தா பாருங்கடா' என விஜய் சேதுபதி சொன்னதை உடனே டைட்டிலாக பதிவு செய்யுங்கள்' என அவர் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி கூறிய வசனம் இப்போது வைரலாக பரவி வருகையில், சீக்கிரமே அந்த தலைப்புடன் ஒரு படத்தை எதிர்ப்பார்க்கலாம்.

Entertainment sub editor